வெள்ளி, 6 நவம்பர், 2009

தினம் ஒரு சிவஸ்தலம் - அருட்சோமநாதேஸ்வரர் கோவில், நீடூர

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
                                                   தகவல் பலகை

சிவஸ்தலம் பெயர் நீடூர்
இறைவன் பெயர் அருட்சோமநாதேஸ்வரர், கான நிர்த்தன சங்கரர்
இறைவி பெயர் வேயுறு தோளியம்மை, ஆலாலசுந்தர நாயகி
பதிகம் திருநாவுக்கரசர் - 1
சுந்தரர் - 1
எப்படிப் போவது மயிலாடுதுறையில் இருந்து 3 Km தொலைவில் உள்ளது. மயிலாடுதுறை - சிதம்பரம் ரயில் மார்க்கத்தில் நீடூர் ரயில் நிலையம் இருக்கிறது.கோவில் அமைப்பு: கிழக்கு திசையில் பிரதான வாயிலைக் கொண்ட இந்த ஆலயம் இரண்டு பிரகராங்களைக் கொண்டுள்ளது. இறைவியின் சந்நிதி வெளிப் பிரகாரத்தில் தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது. இறைவன் அருட்சோமநாதேஸ்வரர் சந்நிதி இரண்டாம் பிரகாரத்தில் உள்ளது. முருகர், சிவலோகநாதர், கைலாயநாதர், காசி விசுவநாதர் மற்றும் மகாலக்ஷ்மி ஆகியோரின் சந்நிதிகள் இரண்டாம் பிரகாரத்தில் இருக்கின்றன. கருவறையின் கோஷ்டங்களில் தட்சினாமூர்த்தி, பிரம்மா, அண்ணாமலையார், சண்டிகேஸ்வரர் மற்றும் துர்க்கை உருவங்கள் உள்ளன.

தல வரலாறு: இத்தலத்தில் உள்ள சிவலிங்கம் தேவேந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மணலால் உருவாக்கப்பட்ட இந்த சிவலிங்கத்தை இந்திரன் பூஜித்ததாக ஐதீகம். சூரியன் மற்றும் சந்திரன் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: