வியாழன், 29 ஜனவரி, 2009

சிவா- மனசுல- பிரியா -the autograpah

பாகம் -1

கதைக்குள்ள நுழையுறதுக்கு முன்னாடி சிவாவை பத்தி ஒரு சின்ன அறிமுகம் பார்ப்போம்..

சிவாவுக்கு வயது 23.ஒரு கம்பனில நல்ல வேலையில தான் இருக்கான்.சென்னைக்கு பக்கத்தில் இருக்கும் சின்னதான கிராமம் தான் அவன் ஊர்.. ஒரு வருசத்துக்கு முன்னாடி அவனோட காதலிக்கு கல்யாணம் ஆனதிலிருந்து அவனோட போக்கே மாறிடுச்சு..அப்போதிருந்து அவன் தினமும் ஒரு இடத்திற்கு செல்லாமல் போகவே மாட்டான்..கொஞ்ச கொஞ்சமா மாறி இப்பவெல்லாம் ஒன்னாம் தேதி ஆனா மட்டும் நம்ம சிவா முக்கியமான ஒரு இடத்தில் இருப்பான் தன் நணபர்கள் புடை சூழ....

அட இன்னைக்கும் ஒன்னாம் தேதி தான்..சிவா அங்கதான் இருப்பான்..வாங்க இனிமே சிவாவை நாம எல்லாரும் சேர்ந்தே பார்ப்போம்...

சிவா வழக்கம் போல தன் சம்பள பணத்தை எடுத்துகொண்டு டாஸ்மாக்ல தான் இருக்கான் தன் நண்பர்களோடு.. ஐந்து பேருக்கு மத்தியிலே கொஞ்சம் கருப்பா ஒல்லியா கையில சிகரெட்டும் வாயில புகையுமா இருக்கானே அவன் தான் சிவா.அவனோட வலதுபக்கமா ஒல்லியா சிவா மாதிரியே இருக்கானே அவன் தான் தடி தாமு.என்னடா தடி தாமுன்னு குச்சிமாதிரி இருக்கரவன காட்டுறாங்களேன்னு பார்க்கறீங்களா...சிவா வோட நண்பர்கள் எல்லார் பேர் முன்னாடியும் ஒரு அடைமொழி இருக்கும்.தாமு பேர் முன்னாடி தடின்னு போட்டா நல்லா இருக்கும்னு ஆசைப்பட்டதால இவனோட பேர் தடி தாமுன்னு ஆயிடுச்சு..தடி தாமு சிவாவோட பங்காளி..
அடுத்தது தாமுவுக்கு நேர் எதிரா சிவப்பா உக்காந்திருக்கானே அவன் பல்லா பன்னீர்..பேர் வித்தியாசமா இருக்கேன்னு யோசிக்கறீங்களா..பன்னீர் ரொம்ப நல்லபையனா தான் இருந்தான் ரெண்டு வருசம் முன்னாடி..ஒரு சமயம் பசங்க எல்லாருமா சேர்ந்து களளு குடிக்க போனப்ப போதை தலைக்கேறி பல்லாவை உடைச்சுட்டான்.அப்போதிருந்து அவனுக்கு பல்லா பன்னீர்னே பேராயிடுச்சு..பன்னீர் சிவாவோட மாமா பையன்..அடுத்தது தாமுவுக்கு பக்கத்தில் இருக்கற உம்மனாமூஞ்சி பேரு வேதனை வரதன்..எப்பவுமே எதையாச்சும் சொல்லி சோகமாவே இருப்பான்..23 வய்சுக்குள்ள 6 த்டவை லவ் பெயிலியர்னா பாத்துக்கோஙகளேன்... இது தாங்க நம்ம சிவாவோட சரக்கு வட்டம் ச்சீ நண்பர்கள் வட்டம்..

இனிமே நீங்களே வேடிக்கை பாருங்க நம்ம சிவாவோட 
கூத்தையும் கும்மாளத்தையும்.............

" பங்காளி எவ்ளோ அடிச்சாலும் ஏறவே மாட்டேங்குதுடா..இன்னாடா சரக்கு விக்குறானுவ,கடைய அடிச்சு உடைச்சுடலாமாடா" என்றான் சிவா.

"நல்லாவே ஏறிடுச்சுன்னு உன் பேச்சிலிருந்தே தெரியுதுடா" தடி பதிலடி கொடுத்தான்..

" மச்சான் நீ போய் இன்னொரு ஹாப் எடுத்துட்டு வாடா" என்றபடியே தன் பர்ஸை எடுத்து பல்லாவிடம் கொடுத்தான் சிவா..

"இன்னாடா சரக்கு வாங்கியார,டேய் 160 ரூபாய் எடுத்துகிட்டேன்,நெப்போலியன் வாங்கிட்டு வந்துடறேன்" கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லிவிட்டு தடுமாறி நடந்தான் பல்லா...

" மச்சான் நீ போய் இன்னும் 4 ஊறுகாய் பாக்கெட் வாங்கிகினு வாடா" என்று வேதனையிடம் சொல்லி 50 ரூபாயை கொடுத்தான்..

"ஓசிக்குடி குடிக்க வந்தா ஓவரா வேலை வாங்குவான்டா இவன்னு மனக்குள் முனகியவாறு வேதனை நடந்தான்..

சிறிது தூரம் நடந்தவனை நோக்கி

"மச்சான் டேய் அப்படியே ஒரு பாக்கெட் பில்டரும்,ஒரு ஹன்ஸ் பாக்கெட் நாலு சூப்பர் பாக்கு வாங்கிகிட்டு வா"
என்று சத்தமாய் சொல்லி விட்டு குனிந்த சிவாவை நோக்கி 

"இப்படியே எல்லா பழக்கத்தையும் வெச்சிகிட்டிரு.சீக்கிரமே சாவதான்டா போற" -- தடி..

"பங்காளி நம்ம பாலிசியே களவும் கற்றுமற தான்டா..எல்லா பழக்கமும் வெச்சிருக்கணும்.அப்பறம் விடருவேன்" -- சிவா  

"ரெண்டு வருசமா இதையே தான்டா சொல்லிட்டு திரியுற " --தடி 

அவனுக்கு பதில் சொல்ல சிவா வாயெடுக்க வாஙகி வந்த ஹாப்பை கையில் திணித்தான் பல்லா...

மடமடவென மூடியை திருகி ஒரு கட்டிங்கை மட்டும் ஊற்றி குடித்துவிட்டு 

"டேய் எங்கடா இவன் ..ஊறுகாய் வாங்கியாற சொல்லி கால்மணிநேரமாவுது.பங்காளி கடைக்காரஙகிட்ட வேதனைகதை எதாச்சும் சொல்லிட்டிருப்பானோன்னு சிவா முடிப்பதற்கும் வரதன் வந்து 

"இந்தாடா.'.

"டேய் இன்னாடா ஊறுகா இது..லெமன் ஊறுகாய் வாங்கிட்டு வரவேண்டியது தானே" -சிவா

ஊறுகாயை தொட்டு நக்கிவிட்டு 

"பங்காளி என் மனசுல இருக்கற பிரியாவை நான் என்னைக்கு பாக்குறேனோ அன்னைக்கே நான் பாக்கு போடறதே விட்டுருவேன்,

என்னைக்கு அவகிட்ட பேசுறேனோ அன்னைக்கே சிகரெட்டும் விட்ருவேன்..அவளை கல்யாணம் பண்ணிகிட்டா அந்த நாள்ல இருந்து குடிக்கற்தையே விட்ருவேன்டா" எப்பவோ கேட்ட கேள்விக்கு சிவா 


"ஆரம்பிச்சுட்டான்டா பிரியா புராணத்தை" கோரசாக அடைமொழி கோ

"நீ வேணா பாரு மச்சான்..நான் பிரியான்னு ஒரு பொண்ணை லவ் பண்ணி கல்யாணம் பண்ணதான் போறேன்" 

சொல்லிகொண்டே அடுத்த கட்டிங் அடித்தான் சிவா..

ஒரு சிகரெட்டை பற்றவைத்து 4 வது பஃப்புக்கெல்லாம்
குழைய ஆரம்பித்தான்..

"டேய் சீக்கிரம் குடிங்கடா.சிவா மட்டையாயிட்டான்.போலாம்"--தடி 

ஒரு வழியாய் முடித்து கிளம்பி பைக்கில் உட்காரகூட முடியாத சிவாவை தன் தோள் மீது சாய்த்துகொண்டு பைக்கை எடுத்தான் தடி...

சில அடிதூரத்தில் மஞ்சள் சுடிதாரில் ஒரு அழகான பெண்ணும் ஒரு வயதான அம்மாவும் வந்தார்கள்..

"பஙகாளி செம பிகருடா .."சத்தமாய் சிவா

" சீக் பொறுக்கி பசங்க இதுக்குன்னே தான் வருவானுங்க போல" கோபமாய் அந்த பெண்..

"பங்காளி பங்காளி வண்டிய நிறுத்துடா.....அவளை ஒரு வழி பண்ணிடறேன்" சிவா

நின்ற வண்டியிலிருந்து வேகமாக இறஙகி சிவா அந்த பெண்ணை நோக்கி

"ஏய் இன்னா பண்ணாங்கன்னு இப்படி சிலுத்துக்கற ..போடி போ.." பேசிவிட்டு தெனாவட்டாய் திரும்பினான் சிவா..

"ஹேய் பிரியா..எதுக்குடி வீணா வம்பு ..வா போகலாம்"
என்றாள் அவள் அம்மா..

"ஐய்யய்யோ ப்ரியாவா.. ஹலோ ப்ரியா சாரிங்க..தெரியாம ...பிளிஸ் சாரிங்க.."குழைந்த சிவாவை முறைத்துவிட்டு வேகமாய் நடந்தாள் ப்ரியா..

"பங்காளி இனிமே இவளை பாலோ பண்றது தான்டா என் வேலையே..இன்னைக்கு நிலமை சரியில்லை..நாளைக்கு பாத்துக்க்லாம் வ்ண்டிய எடு என்று சொல்லி அமர்ந்த சிவா
தடியின் மீது ஆம்லேட்(வாந்தி) போட்டு விட்டு அதன் மேலயே சாய்ந்து விட்டான்...

தொடரும்.............

கருத்துகள் இல்லை: